கோப்புப்படம்
இலங்கையின் தென் கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இழுவை படகு ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பயணித்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்திருந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் கரைக்கு அழைத்துவரப்படுவதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தியதன் பின்னர் ஹெரோயின் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments