Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அகில இலங்கை ரீதியில் 966 ஆவது நிலையில் இருந்த மாணவன் மீள் மதிப்பீட்டில் 124ஆவது நிலையில்!


க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உயர்தரப் பரீட்சைக்கு கணித பாடத்தில் தோற்றிய கண்டி தர்மராஜா கல்லூரியின் மாணவன் ருச்சிர நிசங்க அபேவர்தன அந்த பாடத்தில் C சித்தி பெற்றிருந்தார். அத்துடன் வேதியியல் மற்றும் இயற்பியலில் பாடங்களில் அவர் A தேர்ச்சி பெற்றிருந்தார்.

அதனடிப்படையில், குறித்த மாணவனின் Z புள்ளி 2.0084 ஆகவும், மாவட்டத்தில் 68 ஆவது நிலையாகவும் , அகில இலங்கை ரீதியில் 966ஆவது நிலையிலும் மாணவன் இருந்துள்ளார். 

இந்நிலையில் மீள் மதிப்பீட்டின் ஊடாக அவரது கணிதப்பாட பெறுபேறு C யில் இருந்து A ஆக மாறியதை அடுத்து குறித்த மாணவனின் Z புள்ளி 2.5538 ஆகவும், மாவட்ட நிலை 68 ஆவது நிலையில் இருந்து,  12 ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளதுடன், அகில இலங்கை ரீதியில் 966ஆவது நிலையில் இருந்த மாணவன்  124 ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

இதேவேளை மீள் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 48,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments