Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நயினாதீவில் கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்த அதிபர் உயிரிழப்பு


நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்துள்ளார்.

நயினாதீவை சேர்ந்த, நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார் 

அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும் , பயணிகள் படகினை தவறவிட்டமையால் , கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர்.

அதன் போது, கடற்காற்று காரணமாக  கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடலையில் அடிப்பட்டமையால் , படகில் இருந்து அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார். 

அதனை அடுத்து , உடனடியாக செயற்பட்ட படகோட்டி அதிபரை மீட்க முற்பட்ட நிலையில் , அவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments