Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நயினாதீவு அதிபர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் - படகோட்டி கைது


படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் ,படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்து நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவர் உயிரிழந்துள்ளார் 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் படகோட்டியை கைது செய்து , போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments