யானையின் தாக்குதலில் இருந்து 13 வயது சிறுமி ஒருவரை , சிறுமியின் தாயும் பாட்டியும் இணைந்து யானையுடன் போராடி காப்பற்றியுள்ளனர்.
தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுமி காலை தனது பாட்டி (தாயின் தாய்) வீட்டில் இருந்து பாடசாலை செல்வதற்காக அருகில் உள்ள தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை குறுக்கிட்ட காட்டு யானை சிறுமியை தாக்கி , சிறுமியை தூக்கி வீசியுள்ளது.
சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த சிறுமியின் தாயும் பாட்டியும் , சிறுமியை மீண்டும் யானை தாக்க முற்படுவதனை கண்டு யானையுடன் போராடி யானையை விரட்டி அடித்து சிறுமியை காப்பற்றியுள்ளனர்.
சிறுமியை யானை தூக்கி வீசியதில் சிறுமி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
No comments