புதுவருட தினம் அன்று , பரந்தன் சந்தியில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து , இளைஞர் ஒருவர் போத்தலால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவத்தில் குணரட்ணம் கார்த்தீபன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனை நால்வர் கொண்ட குழு தாக்கி போத்தலால் குத்த முயன்ற போது அதனை தடுக்க சென்ற அவரது மருமகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அதில் படுகாயமடைந்துள்ள மருமகன் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவரது வீட்டில் இறுதி கிரிகைகள் நடைபெற்ற பின்னர் , இளைஞனின் உறவினர்கள் , நண்பர்கள் சடலத்துடன் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை பரந்தன் சந்தியில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞனை படுகொலை செய்த நபர்கள் பொலிஸாருக்கு நெருக்கமானவர்கள் எனவும் , அதனால் அவர்களை இதுவரை கைது செய்யவில்லை என கூறியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
;இதேவேளை நேற்றைய தினம் பரந்தன் சந்தி பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படங்கள் :- த. சிவா (கிளிநொச்சி ஊடகவியலாளர்)
No comments