Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முதலை தாக்கியதில் மீனவர் உயிரிழப்பு!


அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த மீனவரை முதலை தாக்கியதில் மீனவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

திருக்கோவில் , மண்டானை பகுதியை சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்த்தி (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். 
 
சாகாமம் தாலிபோட்டாற்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போதே முதலை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 
 
சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments