Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் "எங்கள் சினிமா" அறிமுக கலந்துரையாடல்!


கரூடா தயாரிப்பு நிறுவனத்தின் "எங்கள் சினிமா" எனும் திட்டத்தின் அறிமுக கலந்துரையாடல் எதிர்வரும் 24ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 

கரூடா தயாரிப்பு நிறுவனத்தின் "எங்கள் சினிமா" எனும் திட்டத்தின் கீழ் திறமையும் ஆர்வமுள்ள தமிழ்  குறும்படச் செயற்பாட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக வடகிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஓவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுள் 4 சிறந்த திரைக்கதைப் பிரதிகளும் 1 குறும்படமும் உருவாக்கப்படும்.

 இப்போட்டி முதல் கட்டமாக மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய 04 மாவட்டங்களிலும்.இரண்டாம் கட்டமாக அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய 04 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் நோக்கத்தினை தெளிவுபடுத்துவதற்காக யாழ் மாவட்டத்திற்கான அறிமுக கலந்துரையாடல் எதிர்வரும் 24ஆம் திகதி யாழில் U.S ஹோட்டலில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என மேலும் தெரிவித்துள்ளனர். 

No comments