பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சிறு நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ரூபா 24 இலட்சம் பெறுமதியான இந்த இயந்திரத்தை சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் வே.கமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
No comments