Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கனரக வாகனம் - சொகுசு பேருந்து விபத்து - 08 பேர் காயம்!


கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து  கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , 8 பேர் காயமடைந்துள்ளனர். 

கலேவெல பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து , வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கனரக வாகனத்துடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

No comments