Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இளைஞனிடம் பெண் போன்று பேசி இலட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞன்!


பெண் போன்று இளைஞனுடன் பேசி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த இளைஞனிடம் , மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியை சேர்ந்த இளைஞன் பெண் போன்று தொலைபேசியில் பேசி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ஆயித்தியமலை பகுதியை சேர்ந்த இளைஞன் முகநூல் ஊடாக அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனுடன் உரையாடி, அவரது தொலைபேசி இலக்கத்தை பெற்று கடந்த 2 மாத காலமாக தொலைபேசியில் உரையாடி வந்துள்ளார். 

இந் நிலையில் அம்பாறை இளைஞன் திருமணம் முடிக்கவில்லை என தெரிந்து கொண்ட மட்டக்களப்பு இளைஞன் தனது பெரியம்மாவிற்கு மகள் இருப்பதாகவும் அவளுக்கு திருமணம் பேசி வருவதாக குறித்த தெரிவித்து, பெண் ஒருவரின் படத்தை அனுப்பி இது தான் எனது பெரியம்மாவின் மகள் என தெரிவித்துள்ளார். 

பின்னர் மட்டக்களப்பு இளைஞன் வேறு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து, தான் மட்டக்களப்பு இளைஞனின் சகோதரி என அம்பாறை இளைஞனுடன் தொலைபேசி அழைப்பில் அறிமுகமாகி , அந்த பெண் கதைப்பது போல, அம்பாறை  இளைஞனுடன் கதைத்து வந்ததுடன் பெண்னின் தாயார் எனவும் பெண் குரலில் கதைத்து வந்துள்ளதுடன் தொலைபேசிக்கு ரீலோட் செய்யுமாறு கூறி அடிக்கடி  பணத்தையும்  வாங்கி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் அம்பாறை  இளைஞனுக்கு அந்த பெண் (மட்டக்களப்பு இளைஞன்) மீது காதல் ஏற்பட்டதையடுத்து அவளை திருமணம் முடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து மட்டக்களப்பு இளைஞன் தனது பெரியம்மாவின்  மகளுக்கு சீதனமாக வீடு, பணம் தருவதாகவும் அவர்கள் பணக்காரர் எனவும் பொய்களை கூறியுள்ளார். 

பின்னர் பெண்ணின் பெற்றோர் மாப்பிளையை பார்ப்பதற்கு அக்கரைப்பற்றுக்கு வருவதாக கூறி திகதியை தீர்மானித்தனர்.

திகதி தீர்மானிக்கப்பட்டதையடுத்து மாப்பிள்ளை வீட்டினரான அம்பாறை இளைஞன்,  தமது வீட்டிற்கு வர்ணம் தீட்டி மற்றும் பெண் பகுதியினர் வரும்போது அவர்களுக்கான உணவு வழங்க பல ஆயிரம் ரூபா செலவு செய்து உணவு ஏற்பாடுகள் செய்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் காத்திருந்தனர்.

நீண்ட நேரம் காத்திருந்தும் பெண் வீட்டாரை காணாததால் மட்டக்களப்பு இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, மாப்பிளை பார்ப்பதற்கு வேன் ஒன்றில் வெளியேறிய போது வீட்டின் வாசலில் பூனை குறுக்கால் போனது சகுணம் சரியில்லை அதனால் வரவில்லை என தெரிவித்து வேறு ஒரு தினத்தில் வருவதாக தெரிவித்துள்ளான்.

இதனை தொடர்ந்து மாப்பிளையை பார்ப்பதற்கு வருவதற்கு பல சாக்கு போக்குகளை தெரிவித்து வந்துள்ள நிலையில் பெண்னை பார்ப்பதற்கு பெண் வீட்டிற்கு தாங்கள் வருவதாக அக்கரைப்பற்று இளைஞன் தெரிவித்து அதற்கான திகதியான கடந்த 23ம் திகதி தீர்மானிக்கப்பட்டு அன்று பெண்ணை பார்ப்பதற்கு மாப்பிளை வீட்டினர் வான் ஒன்றை வாடைகைக்கு பெற்றுக் கொண்டு காலையில் மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்தனர்.

கல்முனையில் வைத்து ஆயித்தியமலை இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.

பலமுறை முயற்சித்தும் மட்டக்களப்பு இளைஞனுடனும் , பெண் போன்று கதைத்த தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்ட போது அந்த இலக்கங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

 பெண்ணின் விலாசம் தெரியாது என்ன செய்வது என தெரியாது நீண்ட நேரம் காத்து நின்றுவிட்டு அங்கிருந்து  மாப்பிளை வீட்டினர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

இதன்பின்னர் அன்று மாலை அம்பாறை  இளைஞனுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட மட்டக்களப்பு இளைஞன் மன்னிக்கவும் தொலைபேசியின் பற்றி சார்ச் இல்லாததால் தொலைபேசி தானகாக நின்றுவிட்டது. 

நான் உங்கள் வீட்டிற்கு வருகின்றேன் என தெரிவித்து மட்டக்களப்பில் இருந்து பஸ்வண்டியில் அக்கரைப்பற்றுக்கு சென்ற நிலையில் அவனை தனது வீட்டிற்கு கூட்டிச் சென்று இரவு தங்கவைத்து உபசரிப்பு இடம்பெற்றதுடன் பெண் வீட்டிற்கு நாளைக்கு கூட்டிச் செல்வதாக தெரிவித்து கலந்துரையாடியுள்ளனர்.


மறுநாள் 24 ம் திகதி வியாழக்கிழமை காலை குறித்த மட்டக்களப்பு இளைஞன் மற்றும் அக்கரைப்பற்று  இளைஞனின் உறவினர்களான இரு பெண்களுடன் மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு வந்தடைந்த பின்னர் பெண் வீடு கூளாவடியில் இருப்பதாகவும் பல சாக்கு போக்கு தெரிவித்து என்ன செய்வது என தெரியாது நின்ற மட்டக்களப்பு இளைஞனிடம்,   அக்கரைப்பற்று இளைஞன் விடாப்பிடியாக பெண்வீட்டிற்கு கூட்டிச் செல்ல வற்புறுத்தி உள்ளான். 

அதன் போது மட்டக்களப்பு இளைஞனின் நடவடிக்கையில் அம்பாறை இளைஞனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அம்பாறை இளைஞன் உசாரடைந்து , மட்டக்களப்பு இளைஞரை  பிடித்து கொக்குவில் பொலிசாரிடம் சென்று தமக்கு நடந்ததை தெரிவித்து,தமக்கு சுமார் ஒன்றரை லட்சத்துக்கு மேலாக கடந்த 2 மாதத்தில் செலவாகியுள்ளதாக அம்பாறை இளைஞன் தெரிவித்தான்.

இதனை தொடர்ந்து குறித்த இளைஞன் தான் பெண் குரலில்  கதைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஓப்புக் கொண்டுள்ளார். 

அதேவேளை கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு இளைஞனின் சகோதரி பொலிஸ் நிலையத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட அம்பாறை இளைஞனின் குடும்பத்தினரிடம் தமது கஷ்ட நிலையை தெரிவித்து சகோதரன் தவறு செய்துவிட்டார் என மன்னிப்பு கேட்டதையடுத்து அந்த இளைஞன் முறைப்பாடு செய்ய வில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

No comments