Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாள் வெட்டு சந்தேகநபர் யாழில் கைது!


வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே இன்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேக நபர் 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டுள்ளார்

No comments