Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் ஆலயத்தில் கண்ணை பறிக்கும் மின்அலங்காரத்தால் பலர் வைத்தியசாலையில்


பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின் பயன்பாடு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை சுமார் 40 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், கண்களில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தை யும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என  செயலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments