Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

விகாரைகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த தம்பதி கைது!


புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை இலக்கு வைத்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் அநுராதபுத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் புத்தளத்தில் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

அநுராதபுரம் உடுபந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணும், 22 வயதுடைய இளைஞனும் திருமணம் முடித்த தம்பதியினர் ஆவார்கள்.

இவர்கள் பௌத்த விகாரைகளுக்குச் சென்று அங்கு கடமைபுரியும் பௌத்த மதகுரு மற்றும் பௌத்த விகாரையில் உபகாரம் புரியும் மதகுருக்களை இலக்கு வைத்து அவர்களுடன் நெருக்கமாக கலந்துரையடியே விகாரைகளில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கணவனும், மனைவியும் விகாரைகளுக்கு சென்றதும், மனைவி குறித்த விகாரைகளில் உபகாரம் புரியும் மதகுருமார்களை அணுகி பேச்சைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது கணவனான 22 வயதுடைய இளைஞன் பிரதம பௌத்த மதகுரு தங்கியிருக்கும் அறைகளுக்குள் புகுந்து பணம், தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை திருடி விடுவார். 

குறித்த நபர்கள் புத்தளம் - பல்லம நந்திமித்ர ரஜமஹா விகாரைக்குள் நுழைந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை திருடியுள்ளனர்.

பௌத்த விகாரைக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய் பறித்து விற்கப்பட்ட பணம், விகாரையின் புனரமைப்பிற்காக கிடைத்த அன்பளிப்பு பணம், பிரதம பௌத்த மதகுருவிற்கு சொந்தமான பணம் என்பன அங்கு வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவை திருட்டு போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேக நபர்களான கணவனும், மனைவியும் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சீ.சீ.டி.வி காணொளியின் உதவியுடன் சந்தேக நபர்களை ஆண்டிகம பகுதியில் வைத்து நேற்று (16) கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களன தம்பதியினர் ரஸ்னாயக்கபுர, கொபேகன, மற்றும் மஹகும்புக்கடவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலுள்ள 10 இற்கும் மேற்பட்ட விகாரைகளிலும் இவ்வாறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட கணவனும், மனைவியும் ஐஸ் போதை பாவனைக்கு பழக்கப்பட்டவர்கள் எனவும், நாளொன்றுக்கு 4,000 ரூபா வரை போதைப் பாவனைக்கு தேவைப்படுவதாகவும் சந்தேக நபர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

No comments