Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் இராசதானியின் தோரண வாசல் புனருத்தாரண  பணிகளின் பின் ..


யாழ்ப்பாணம் - நல்லூர் இராசதானியின் தோரண வாசல் புனருத்தாரண  பணிகளின் பின்னர் எவ்வாறு காட்சி அளிக்கும் என்பது தொடர்பிலான மாதிரி ஒளிப்படங்களை யாழ். மாநகர சபை முதல்வரின் ஊடக பிரிவு வெளியிட்டு உள்ளது. 

யாழ்ப்பாணம் - நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

இன்று மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாண மரபுரிமையத்தின் தலைவர் பேராசியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலன், நல்லூர் பிரதேச சபை தவிசளார் ம.மயூரன், தேசிய கலாசர நிலையத்தின் யாழ் மாவட்ட செயற்திட்ட பணிப்பாளர் ஆனந், தொல்பொருள் திணைக்கள யாழ் பிராந்திய உதவிப் பணிப்பாளர்  நளின் வீரரத்ன, நல்லூர் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments