நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் உள்ள ஆலமரத்தை வெட்டும் பொழுது அதன் கிளைகள் அவ்வீதியினூடாக மோட்டர் சைக்கிளில் சென்ற ஆசிரியர் ஒருவர் மீது முறிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்தார்.
தலவாக்கலை லோகி தோட்டத்தை சேர்ந்த வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) 2 பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.