உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என 27 இலங்கையர்கள் அறிவித்துள்ளனர் என கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
15 மாணவர்கள் உட்பட உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாணவர்களைத் தவிர அங்கு வசித்த 66 இலங்கையர்களில் 39 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் போலந்து, ருமேனியா, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை தூதரகம் செய்துகொடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது உக்ரைனில் 27 இலங்கையர்கள்தான் இருக்கின்றனர். தற்போது உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என தூதரகத்துக்கு அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






No comments