பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிரிபத்கொட முதியன்சேக தோட்டப்பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்த வேளை சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸாருக்கு அயலவர்கள் அறிவித்ததை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட சடலம் சுமார் 35 வயதுடைய பெண்ணொருவருடையது எனவும் , அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் , சுமார் 4 நாட்களுக்கு முன்னரே பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






No comments