கோப்புப்படம்
தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தடுக்க சென்ற காணி உரிமையாளர் தாக்கப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கொடிகாமம் பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த மணல் கொள்ளையர்கள் , காணிக்குள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த காணி உரிமையாளர் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போது , கொள்ளையர்கள் காணி உரிமையாளரை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளையும் தீ மூட்டி எரிந்து விட்டு சென்றுள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான காணி உரிமையாளர் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments