பெங்கிரிவத்தை வீதியில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பஸ் ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் , போக்குவரத்து பிரிவு பொலிஸாருக்கு சொந்தமான 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பஸ் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வு
நாட்டின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ,கல்கிஸ்ஸ மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments