சிகரெட் வாங்க சென்றவர்கள் கடை உரிமையாளருடன் வாக்குவாதப்பட்டு , உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
மாதம்பை மஹகம பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் உள்ள கடைக்கு வந்த நால்வர் கடை உரிமையாளரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது உரிமையாளர் சிகரெட் இல்லை என்றுள்ளார்.
அதனை அடுத்து நால்வரும் கடை உரிமையாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டள்ளனர். ஒரு கட்டத்தில் தாம் கொண்டு வந்திருந்த கத்தியால் உரிமையாளரை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த கடை உரிமையாளரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிலாபம் வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments