Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்த திட்டம் என்ன? – நாமல் கேள்வி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால், நாட்டின் அடுத்த திட்டம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனநாயகத்தின் கோட்பாடுகளை மீறி அரசாங்கங்களை மாற்ற முடியாது என  இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இன்று கோட்டா வீட்டுக்குப் போ என்று சொல்வீர்கள். ஆனால் நாளை அவர் பதவி விலகினால் என்ன திட்டம்? யார் வழிநடத்துவார்கள்?”  ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்து வருபவரும் இதே பிரச்சினைகளையே எதிர்கொள்ள வேண்டும்.

எனவே, அனைவரும் இணைந்து மக்களின் கோபத்தை தணிக்க முதலில் செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்

No comments