ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 13ஆம் திகதி புதுவருடத்திற்கு முன்னைய நாள் விடுமுறையாகவும் , மறுநாள் 14ஆம் திகதி தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறை நாளாகவும் 15ஆம் திகதி பெரியவெள்ளி விடுமுறை நாளாகவும் , 16ஆம் திகதி சித்திரை பூரணை விடுமுறை நாளாகவும் விடுமுறை விடுபட்டு இருந்த நிலையில் தற்போது வரும் வாரத்தின் முதலாம் இரண்டாம் நாட்களான 11 மற்றும் 12ஆம் திகதிகளும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments