Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 24

Pages

Breaking News

புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன?


தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்கும் வகையில் பிரதமர் பதவியை தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், பிரதமர் மஹிந்த ராஜபகசவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை உடனடியாக பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இந்த கடிதம் ஊடகங்களில் வெளிவந்த பின்னர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவ்வேளையிலேயே புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கோரியுள்ளனர்.

எனினும், தினேஷ் குணவர்தனவினை பிரதமராக ஏற்பதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தயாரில்லை எனக் கூறப்படுகின்றது. அக்கட்சிகளின் தேர்வு டலஸ் அழகப்பெருமவாக இருக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.