Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 29

Pages

Breaking News

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள்!

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41 ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில்  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. 

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த நினைவேந்தலின்போது யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பொதுசன நூலக பிரதம நூலகர், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

யாழ்ப்பாண பொதுநூலகம்1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது.நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.






யாழ். பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டம் யூன் 28ஆம் திகதி ...

கல்வியறிவு இல்லாதவனுக்கு பதவியா ? - தேசிய மக்கள் சக்திக்குள்...

யாழுக்கு விருந்திற்கு வந்துவிட்டு , திருகோணமலை திரும்பியவர் ...

யாழில். பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் உயிரிழ...

பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்?

கண்டியில் 36 மணி நேரம் நீர் வெட்டு

பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு ; 600 கிலோ போதைப் பொர...

யாழ் . போதனாவிற்கு 208 சிங்கள தாதியர்கள் புதிதாக நியமனம்

பிரபாவின் பூதவுடலுக்கு அஞ்சலி

யாழில். போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்...