வெலிகந்த கந்தகாடு முகாமிலிருந்து 500 – தொடக்கம் 600 பேர் வரை தப்பியோடியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வளிக்கும் முகாம் ஒன்று அங்கு நடத்தப்பட்டு வரும் நிலையில், இரதரப்பினருக்கிடையில் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்தே பலர் தப்பியோடியுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலையே இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினருடன் பொலிஸார் இணைந்து தப்பியோடியவர்களை தேடி சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் துங்காவில் பாலத்துக்கு அருகில் பொலிஸ் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments