யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழில் கல்வி கண்காட்சியையும் திறந்த நாள் நிகழ்வையும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்தார்.
இதன் பின்னர் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.நற்குணேஸ்வரன் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் ஆளுநருக்கு எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கண்காட்சிக் கூடங்களை ஆளுநர் பார்வையிட்டார்.
கண்காட்சியை பெருமளவு பாடசாலை மாணவர்களும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments