சுகயீனம் காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாத்தறை பிரதேச செயலர் கௌசல்யா குமாரியை வைத்தியசாலையின் ஊழியர்கள் சத்திரசிகிச்சை கூடத்தில் தடுத்து வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமக்கு போதிய எரிபொருள் வழங்கப்படவில்லை எனக் கூறி பொது வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலரை சுமார் ஒரு மணித்தியாலம் சத்திரசிகிச்சை கூடத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து பொலிஸார் வருகை தந்து பிரதேச செயலரை மீட்டு வைத்தியசாலையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்