Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இந்த ஜனாதிபதியின் கீழ் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை


போராட்டம் உருவாக முக்கியக் காரணம் பொருளாதாரப் பிரச்சினைதான் எனவும், அதேவேளை ஜனநாயகம், சமூக நீதி போன்ற ஜனநாயக விடயங்கள் மேலெழுந்து வந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம்,சர்வ கட்சி பேராட்டக்காரர்கள் உட்பட பல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறை மூலம் நாடு ஜனநாயக நிலைக்கு மாறும் வரை நாட்டின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களின் எதிர்பார்ப்புகளுடன் விளையாடி போராட்டத்தை காட்டிக் கொடுக்க முடியாது.

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவர்கள் வெளியேறும் போது நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கான வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும்.

தற்போது மாளிகை வர்த்தக மோசடியே இடம்பெற்று வருகிறது. மக்களின் அழுத்தத்தை அரசாங்கம் மோசடிகளுக்கு பயன்படுத்துகிறது. 

இன்று போராட்டம் நடத்தும் இளைஞர்களை அரசாங்கம் கைது செய்து, அவர்களுக்கு எதிராக அரச மிலேச்சத்தனத்தை பிரயோகிகின்றனர். ஆனால் கடந்த 9 ஆம் திகதி பயங்கரவாதத்தை ஆரம்பித்தவர்கள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் அது தனி நபர்களுக்கு வேறுபடாது.

பொது உடன்பாட்டுக்கான பாலமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மாற்றப்படும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைவரையும் ஒன்றினையுங்கள் என தெரிவித்தார்.



No comments