புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களில் 03 பேரை நேற்று காலை அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் நேரமின்மை காரணமாக நேற்று அணிவகுப்பை நடத்த முடியாது என நீதவான் அறிவித்தார்.
அதன்படி, அடையாள அணிவகுப்பு வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதுவரை சந்தேகநபர்கள் 04 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments