இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மேலதிக வாக்குகள் 52 இனால் தெரிவு செய்யப்பட்டார்.
வாக்களிப்பில் 223 பாராளுமன்ற உறுப்பினரகள் கலந்து கொண்டிருந்த நிலையில் அதில் இருவர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர்.
இதற்கமைய, ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.