Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஜனாதிபதியாக பதவியேற்பதற்காகவே ஊரடங்கு ?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலில் இருந்து இராஜினாமாவை இன்றைய தினம் வியாழக்கிழமை அறிவித்தால், இன்றிரவு பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவியேற்க ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலைமையில் குழப்பங்கள் வரலாம் என கருதியே கொழும்பில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படின் இந்த ஊரடங்கு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் பிரதமராக  டலஸ், சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன  ஆகியோரில் ஒருவரை நியமிக்க இரகசிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பதவியேற்ற கையோடு அவசர காலச் சட்டத்தை  அமுல்படுத்தி, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப்போவதாக ரணில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சமூக ஊடகங்கள் சில மணி நேரங்களுக்கு முடக்கப்படும் வாய்ப்பும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments