Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஒரு வார காலத்திற்கு எரிபொருளை பெற்றவர்களுக்கு நாளை எரிபொருள் இல்லை


அனைத்து எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவு செய்யப்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.ஐ ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தனது உத்தியோக பூர்வ முகநூலில் பதிவொன்றினை எழுதியுள்ளார். 

குறித்த பதிவிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

  யாழ் மாவட்ட IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 73% பொதுமக்கள் 27% உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையில் பெற்றோல்  விநியோகிக்க முடிவு!

தற்போது IOC நிறுவனத்தினால் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல அசௌகரியங்களுடன் பல நாட்களாக வீதிகளில் காத்திருக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பின்வரும் நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நடைமுறைகள் IOC யாழ்ப்பாணம், IOC நுணாவில், IOC காரைநகர் ஆகிய மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தபடவுள்ளது.

அதன்படி

• யாழ் மாவட்ட IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கிடைக்கும் எரிபொருளானது 73% பொதுமக்கள், 27% உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

• நாளை(05.07.2022) வழங்கப்பட்டவுள்ள எரிபொருள் விநியோகத்தின்போது, மாவட்டத்திலுள்ள IOC நிலையங்களில் கடந்த ஒரு வாரத்துக்குள் எரிபொருளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு மாத்திரம் வாகன இலக்க பரிசோதனையை தொடர்ந்து Token வழங்கப்பட்டு எரிபொருள் விநியோகிக்கப்படும். 

• எரிபொருள் கையிருப்பை கணித்து, அனைவருக்கும் சம அளவில் விநியோகம் செய்யும் நோக்கில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் Tokens வழங்கப்படும்.

• எதிர்வரும் நாட்களில் IOC நிலையங்களில் இடம்பெறும் எரிபொருள் விநியோகங்களும், எரிபொருள் விநியோக அட்டையின் அடிப்படையில் இடம்பெறும். ஆகவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத மக்கள் இவ்வாரத்துக்குள் பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவுகளை மேற்கொண்டு எரிபொருள் அட்டையை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

• அனைத்து எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவு செய்யப்படும். 

• அத்துடன் எரிபொருள் விநியோக பதிவுகள் யாவும் செயலி மூலமும் பதிவு செய்யப்படும். என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.   

No comments