Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சுமந்திரன் பிரதமரானால் வரவேற்பேன்


புதியவர்கள் புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க போகின்றோம் என மக்கள் முன் வந்தால் அதனால் எந்த பயனும் கிடையாதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமரும், பிரதமர் செயலிழந்து போனால் அவருக்கு முடியாத போனால் ஒரு மாத காலத்திற்கு சபாநாயகர் பதவியை ஏற்று நடத்த உரித்திருக்கின்றது. ஆகவே ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமரும் பிரதமருக்கு பதிலாக சபாநாயகருமென அந்த மூன்று பேருக்குமே அந்த உரித்து காணப்படுகின்றது.

புதியவர்கள் புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க போகின்றோம் என மக்கள் முன் வந்தால் அதனால் எந்த பயனும் கிடையாது. எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைப்பது என்பதை விட எங்களிடம் என்ன கொள்கைகள் என்ன மாதிரியான விடயங்களை முன்வைத்து நாம் அரசாங்கத்தை அமைக்க போகின்றோம் என்பதே முக்கியம் என்றார்

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் பிரதமராக நியமிக்கப்படலாம் என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள கருத்துக்கள் தொடர்பாக கேட்ட போது,

"மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உத்தியோகபூர்வமல்லாத வகையில் சுமந்திரனை பிரதமராக நியமிக்கலாம் என்று அணுகியநிலையில் அதை எல்லா கட்சிகளும் இணைந்து அழைத்தால் தான் அந்த பதவியை ஏற்க முடியும் என சுமந்திரனுக்கு தெரிந்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார். " சுமந்திரனை பிரதமராக அழைத்து என்றால் உண்மையானால் நான் சந்தோஷம் அடைவேன். ஏனென்றால் அவர் என்னுடைய மாணவர். பல வருட காலமாக தெரிந்தவர் என்ற வகையில் அதற்கு நான் எதிர்ப்பு அல்ல.

இது பற்றி இணைய வழிக் கலந்துரையாடலில் கூறியதன் காரணமாக இன்று அது பரகசியமாகியுள்ளது. 

ஆனால் சில விடயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய கட்சியினுடைய ஏகோபித்த விருப்பிலா அல்லது தன்னுடைய தனிப்பட்ட விருப்பில் ஏற்றுக் கொள்வதா என்பது ஒரு கேள்வி.

இரண்டாவது கேள்வி தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்றதன் பிற்பாடு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால், தாங்கள் என்ன காரணத்துக்காக நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்பதை மறக்க வேண்டிய நிலை ஏற்படும். 

காரணம் எந்த நேரமும் மத்திய அரசுடன் இணைந்து வேலையைச் செய்யும்போது மத்திய அரசாங்கத்தினுடைய விருப்பு தாக்கம் செலுத்துவதால் தமிழ் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை மறந்து விடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

நான் நினைக்கின்றேன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்றதன் பின்னர் அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்வில் பல முரண்பாடுகள் ஏற்பட்டது. 

அது போலவே சம்பந்தனும். சுமந்திரன் இவ்வாறு பதவி ஏற்றுக்கொள்வதானால் தமிழ் கட்சிகள் அனைவரினதும் ஏகோபித்த விருப்பை பெற்றுக்கொண்டால் நல்லது என நினைக்கின்றேன் என்றார்.

No comments