சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 6.995 கிலோ கிராம் எடையுள்ள 60 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 157 மில்லியன் ரூபா எனவும் விமான நிலைய சுங்கப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலைய Duty Free கடையில் கடமையாற்றும் ஜா எல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் 24 கெரட் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments