Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காலாவதியாக வேண்டிய பயங்கரவாத தடைச் சட்டத்தை பல்கலை மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது வருந்தத்தக்கது!


பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை பயங்கரவாதம் எனச் சொல்லி மூன்று மாதங்களுக்கு தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான யோசனை மிகவும் வருந்தத்தக்கது. அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இது குறித்து பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அது குறித்து மேலும் தெரிவிக்கையில்

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக போலீஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை கட்டளை ஒன்றை பெற்று மூன்று மாதங்கள் தடுத்து வைத்திருப்பதற்கு தாங்கள் கோரியிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட விடயம். கடந்த ஆட்சிக்காலத்திலே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி வேறொரு சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்திருந்தது. இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மிக மோசமானது. அதை முற்றாக நீக்கப்பட வேண்டும் என நாடு பூராகவும் ஒரு போராட்டம் வகையில் நடத்தி வருகின்றோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுகின்ற வரை அதனை உபயோகிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். அவ்வாறான சூழ்நிலையில் தான் திடீரென மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை உபயோகிக்கின்றார்கள்.

பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர் வசந்த முதலிகே மற்றும் இருவர் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டனர். 

16 பேருக்கு பிணை கொடுக்கப்பட்ட போதும் இவர்களுக்கு மட்டும் பயங்கரவாத தடை சட்டம் பிரிவு பிரயோகிக்கப்படுகின்றது.

 காலாவதியாகி இருக்க வேண்டிய பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கப்பட வேண்டுமென அனைவரும் ஏற்றுக் கொண்டு கொண்டிருக்கின்றபோதும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உபயோகிக்க ஆரம்பிப்பது மிகவும் மோசமான அடிப்படையாக நாங்கள் கருதுகிறோம். உபயோகிக்கப்படக்கூடாது.

பயங்கரவாத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் ஜனநாயக வழியில் போராடுவது அவர்களுக்கான உரிமை. அதற்காக அவர்களுக்கு தண்டனை கூட வழங்க முடியாது. ஆனால் அதனை பயங்கரவாதம் என சொல்லி மாணவர் தலைவர்களை மூன்று மாதங்களுக்கு தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான இந்த யோசனை மிகவும் வருந்தத்தக்கது. அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இதை கொடுத்து பதில் சொல்ல வேண்டி இருக்கும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதோடு இந்தச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் முன் வைப்போம்-என்றார்.

No comments