வவுனியாவில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் வாள் வெட்டுக்கு இலக்காகி மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொன்னாவரசன் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 10 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றது.
அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு திருவிழாவின் போது ஆலயத்தில் நின்றோருக்கும் , ஆலயத்திற்கு வந்த குழு ஒன்றுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு , கைக்கலப்பு இடம்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை திருவிழா இடம்பெற்ற போது ஆலயத்திற்கு வந்த குழுவினருக்கும் ஆலயத்தில் நின்றோருக்கும் இடையில் மீண்டும் கைகலப்பு ஏற்பட்டது. அதன் போது வாள் வெட்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.