Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் 63 வர்த்தகர்களிடம் 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவீடு


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 63 வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் , அதன் போது  25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் நீதிமன்றினால் அறவிடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ந,விஜிதரன்  தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாக யாழ்ப்பாணம் மாவட்டம் பூராகவும்  பாவனையாளர் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படையில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலையினை காட்சிப்படுத்த தவறியமை, அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்களை விற்பனை செய்தமை ,  உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்கள் இல்லாது பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை, நுகர்வோரை ஏமாற்றும் நோக்கோடு பொருட்கள் மீது பொறிக்கப்பட்ட விலையினை மாற்றி புதிய விலையினை சேர்த்தமை , இலத்திரனியல் பொருட்களுக்கு குறைந்தபட்ச 6 மாத கால உத்தரவாத காலம் வழங்க தவறியமை , அரச நியமங்கள் தரச் சான்று பொறிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்தமை காட்சிப்படுத்தியமை , போன்ற விடயங்களை செய்யத் தவறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்று ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது குற்றத்தினை ஏற்றுக்கொண்ட 63 வர்த்தகர்களுக்கும் நீதிமன்றத்தினால் 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர்கள் அலுவலர்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் தேடுதல்கள் மற்றும்  கண்காணிப்பு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் விதமாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ன நடவடிக்கை எடுக்கப்படுவுள்ளது 

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள்  விதிமுறைகளுக்கு அமைய தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும் என தெரிவித்தார்

No comments