Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சாகித்திய ரத்னா விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்!


இலங்கை சாகித்திய ரத்னா  விருது பெற்ற  மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் என அழைக்கப்படும் சந்தனசாமி ஜோசப்  தனது 84ஆவது வயதில் இயற்கை எய்தினார். 

ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் , மலையகப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் தெளிவத்தை ஜோசப் ஆவார். 

அறுபதுகளில் எழுதத் தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்.  

பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி பிறந்தார்.  

மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு, மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

உயிர் கல்வியை நிறைவு செய்த பின்னர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தார். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார். 

'காலங்கள் சாவதில்லை' எனும் நாவல் இவருக்கு முக்கியமான நாவல். "நாமிருக்கும் நாடே" எனும் சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். 

இவரது குடை நிழல் என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது.

அதேவேளை இவர் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றிருந்தார். 

No comments