வவுனியா, நெடுங்கேணி பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் வசித்து வந்த நெடுங்கர்ணி பிரதேசத்தில் யுவதியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழந்த யுவதி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் தொலைபேசி இலக்கங்களின் தரவு அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18ஆம் திகதி நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற யுவதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
No comments