பேருவளை, அபேபிட்டிய பிரதேசத்தில் 8 கிலோ 304 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேகநபர் தொடர்பில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் காலி உப பிரிவு அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.