Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொம்மைவெளியில் ஹெரோயின் விற்கும் பெண்ணை பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!


வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. 

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மாத்திரம் இன்றி விநியோகமும் அதிகமாக நடைபெறுகின்றன. 

யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் உளவள ஆசிரியர்கள் 54பேரே இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்.

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சமூகமயப்படுத்தல் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனை போன்றவற்றுக்கு வருவது அதிகரிப்பு.

வடக்கு மாகாணத்துக்கான புனர்வாழ்வு நிலையத்தை  அமைக்க அரச கட்டடத்தை இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஆளுநர் பணிப்பு.

உயிர்கொல்லி போதைப்பொருள் வியாபாரிகள் தம்மை பொலிஸார் கைது செய்வதிலிருந்து தப்பிக்க 2 ஆயிரம் ரூபாவுக்கு தகவலாளிகளை அமர்த்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் பெண் ஒருவர் தொடர்ச்சியாக உயிர்கொல்லி ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபடுகின்றார். அவரை பொலிஸார் கைது செய்கின்றனர் இல்லை.

உயிர்கொல்லி போதைப்பொருள் வியாபாரிகள் என்பது உறுதியாகத் தெரிந்தால், அவர்களைக் கைது செய்ய ஆதாரம் இல்லையென்றால் விசாரணை என்று பொலிஸ் நிலையத்துக்கு தொடர்ச்சியாக பல மணிநேரம் அழையுங்கள் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ஆலோசனை.

வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதை வியாபாரிகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அவர்கள் அதனை காட்டிக்கொடுக்கின்றனர் என்று மக்கள் குற்றம் சுமத்துவதாக நீதி அமைச்சர் நேரடியாகப் பொலிஸாரிடம் தெரிவிப்பு.

உயிர்கொல்லி போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு யாழ்ப்பாண மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களிலும் குறைவு.போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு பேசப்பட்டன. 

No comments