பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சபராலி கான் சவுக் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் இம்ரான்கானின் காலில் காயம் ஏற்பட்டது. அவரது கட்சியினர் (பிடிஐ) சிலரும் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.







No comments