Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.நகர் வீதிகளில் துவிச்சக்கர வண்டிக்கான தரிப்பிட கட்டணம் நீக்கம்!


யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் இன்றைய தினம் முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார். 

யாழ்.நகர் மத்தி பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களிடமிருந்து வாகன தரிப்பிட கட்டணங்கள் அறவிட ஒப்பந்தக்காரர்களுக்கான ஒப்பந்தம் யாழ்.மாநகர சபையினால் வழங்கப்பட்டு இருந்தது. 

வாகனங்கள் , மோட்டார் சைக்கிள்கள் , துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றுக்கு தரிப்பிடக்கட்டணம் அறவிடப்பட்டு வந்தது. 

துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிட கட்டணங்களை அறவிட வேண்டாம் என பல தரப்பினராலும் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக துவிச்சக்கர வண்டிக்கான கட்டணங்கள் அறவீடு செய்வதனை தவிர்க்குமாறு முதல்வரால் ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேவேளை , ஒப்பந்தக்காரர்களின் ஊழியர்கள் தொடர்பில் பல தரப்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த முதல்வர் , உரிய முறையில் ஊழியர்கள் நடந்து கொள்வதனை ஒப்பந்தக்காரர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் , ஊழியர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார். 

குறிப்பாக, கட்டணம் அறவிடும் ஊழியர்கள்  வெற்றிலை போடுவது , பண்பற்ற வார்த்தைகள் பேசுவது , ஒழுங்கான முறைகளில் ஆடைகள் அணிவதில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் அதனை உடனடியாக ஒப்பந்தக்காரர்கள் கவனத்தில் எடுத்து அவற்றை நிவர்த்தி செய்யுமாறும் , ஊழியர்கள் தினமும் மாநகர சபைக்கு வந்து கையொப்பம் இட வேண்டும் எனவும் முதல்வர் பணித்துள்ளார். 

No comments