Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கல்வியங்காட்டு கடை மீது வெளிநாட்டில் இருந்து காசு பெற்ற கூலிப்படையே தாக்குதல்!


யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வர்த்தக நிலையம் மீதும் , வர்த்தகர் மீது, வெளிநாட்டில் வசிக்கும் நபரிடம் காசினை பெற்றுக்கொண்டு,  கூலிப்படையை தாக்குதல் மேற்கொண்டு, வர்த்தக நிலையத்தில் இருந்து 5 இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்வியங்காட்டு சந்தைக்கு அண்மையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு , 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழுவொன்று, வெற்று கண்ணாடி போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டு , அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து , உரிமையாளர் மீதும் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு ,வியாபர பணமான 5 இலட்ச ரூபாய் பணத்தினையும் கொள்ளையடித்து தப்பி சென்று இருந்தனர். 

சம்பவத்தில் காயமடைந்த உரிமையாளர், யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  , வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமரா பதிவுகளின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் , யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர் .

விசாரணைகளின் அடிப்படையில் , தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் , வெளிநாட்டில் உள்ள ஒருவரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டே தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர் என தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் பணத்தினை பெற்றுக்கொண்டு கூலிப்படையாக தொழிற்படும் குழுக்கள் தொடர்பிலான தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்று உள்ளதாகவும் , அதன் அடிப்படையில் கூலிப்படையாக இயங்கும் நபர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் விசேட பொலிஸ் குழுவொன்று செயற்படுவதாகவும் தெரிவித்தனர் 

No comments