Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

13ஐ நடைமுறைப்படுவதில் என்ன சிக்கல் ? ஆராய யாழ் வந்துள்ள சர்வமத குழு!


13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது,

மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளடக்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் , 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது  தொடர்பில் மக்களின் நிலைப்பாடு மற்றும்  வடக்கு கிழக்கில் எவ்வகையான தாக்கத்தை செலுத்தும், அதனை  நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதக, பாதக விடயங்கள் தொடர்பில் மதத் தலைவர்கள் சமூகமட்ட பிரதிநிதிகளின்  கருத்துக்களை அறிவதற்காக குறித்த விஜயம் அமைந்துள்ளதாகவும் 

குறித்த குழுவினர், யாழ்ப்பாணத்தில் உள்ள மதத் தலைவர்கள்,  சமூக மட்ட பிரதிநிதிகள்,  வட மாகாண ஆளுநர் மற்றும் வடக்கில் செயற்படும் அரச அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட உள்ளதோடு மத தலைவர்களையும் தனித்தனியாக சந்திக்க உள்ளதாகவும் யாழ்ப்பாண சர்வ மத குழுவின் இணைப்பாளர் அருட்தந்தை டிக்சன் தெரிவித்தார். 

No comments