Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்


இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து உள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவும், இலங்கையில் இடம் பெற்றது போர் குற்றம் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை எனவும், அதற்குத் தீர்வு வேண்டும் என வலியுறுத்தியும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் லண்டனில் அமைந்துள்ள இலங்கைக்கான தூதரகத்திற்கு முன் லண்டனில் வசிக்கும் 300 க்கு மேற்பட்ட தமிழர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

இதன்போது தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து, தடைகளை உடைப்போம், தமிழீழம் ஒன்றே தீர்வு, அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை திருப்பிக்கொடு, தமிழர் தேசம் எமது அடையாளம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.



No comments