Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வட்டு. யாழ்ப்பாண கல்லூரியின் 200 ஆவது ஆண்டு விழா


வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்ட பல்வேறு நிகழ்வுகள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை சம்பிரதாயபபூர்வமாக வெகு விமர்சையாக கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை கொண்டாடும் முகமாக 200 வது ஆண்டு பொறிக்கப்பட்ட கேக்கினை தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வெட்டிவைத்தார்.

மேலும் கல்லூரியின் அதிபரால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரிக்கான வலைத்தளம் அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கல்லூரியின் சபிக்னல் மெமோரியல் மைதானத்தில் கல்லூரியின் 200ஆவது ஆண்டிற்கான விசேட சின்னம் கல்லூரியின் அதிபர் ருசிரா குலசிங்கம் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வண.பத்ம தயாளனால்  திரைநீக்கம் செய்யப்பட்டது.

சமநேரத்தில் பட்டாசுகள் வெடித்து ,கல்லூரியின் வர்ணம் தாங்கிய பலூண்களும் ஆகாயத்தில் பறக்கவிடப்பட்டன.

இதனை தொடர்ந்து 200 ஆவது ஆண்டிற்கான ஜேர்சி ,சொக்ஸ் மற்றும் கல்லூரியின் நாட்காட்டியும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டடமும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது தென்னிந்திய திருச்சபையின் பேராயர்,அங்கெலிக்கன் திருச்சபையின் தலைவர், மெதடிஸ்த திருச்சபையின் தலைவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம், யாழ் மாவட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் என  என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








No comments