ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேசுக்கு தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.
No comments