யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
யாழ்..மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது.
சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார்.
அதனால் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தது.
முதல்வர் ஆர்னோல்டினால் , 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்ட போது , அது தோற்கடிக்கப்பட்டது
No comments